முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆங்கிலம் படிக்க முடியவில்லை என நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருவாரூரில் ஆங்கிலம் படிக்க முடியவில்லை என நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் மது பாஷினி. நர்சிங் படித்து வந்த மது பாஷினி தனக்கு ஆங்கிலம் வரவில்லை என்பதால் படிக்கப் பிடிக்கவில்லை என பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து பெற்றோர்கள் படிக்கச்சொல்லி கண்டித்ததால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த நன்னிலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisement:
SHARE

Related posts

ஒரு மாத ஊதியத்தை வழங்கிய திமுக எம்எல்ஏக்கள்!

டி-20 உலகக் கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

Ezhilarasan

“சார்பட்டா பரம்பரை” – விமர்சனம்

Vandhana