தமிழகத்தில் கடந்த 6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது 2 லட்சத்து 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாட்டுகளை தவறாமல் கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுற்றித் திரிவோரிடம் உடனடியாக 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றாதவர்கள் குறித்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முககவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர். தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 45 ஆயிரத்து 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 2 லட்சத்து 20 ஆயிரத்து 806 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 007 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.