முக்கியச் செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்: நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி!

விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதிப்போட்டியில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர், போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெடரரை 6-3, 7-6, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ஹர்காஸ் தோற்கடித்தார். 8 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவரான பெடரர், காலிறுதியிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

Advertisement:
SHARE

Related posts

B.E., B.Tech., படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்

Halley karthi

மதுரையில் சாலை விபத்து: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Vandhana

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?..அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

Saravana