நாகை, கடலூர், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் நிலவுவதால் எண்ணூர், நாகை, கடலூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த…

வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் நிலவுவதால் எண்ணூர், நாகை, கடலூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கில் நகர்ந்து தமிழகம்-புதுச்சேரி மற்றும் ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எண்ணூர், நாகை, கடலூர் துறைமுகங்களில் இன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. மேலும் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோல் பாம்பன் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.