முக்கியச் செய்திகள் தமிழகம்

திராவிடா.. விழி! எழு! நட! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சமூகநீதி கட்சி தொடங்கப்பட்ட நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிடா.. விழி..! எழு..! நட..! என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமூகநீதி கட்சி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள்! சாதியின் பெயரால் கல்வி – வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இடஒதுக்கீடு என நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில், பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம்!

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து – அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம்!” “ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது. திராவிடா.. விழி! எழு! நட!”” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை மாநகராட்சி ‘பட்ஜெட்’ இன்று தாக்கல்

G SaravanaKumar

சிறுமி வன்கொடுமை; காவலர் போக்சோவில் கைது

G SaravanaKumar

திமுகவிற்கு நடிகை விந்தியா சவால்!

Jeba Arul Robinson