கோவை ஆசிட் வீச்சு..! துரத்திப் பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு!!

கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவனை துரத்திச் சென்று பிடித்த ஆனைமலை காவல் நிலைய தலைமை காவலருக்கு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு சான்றிதழ் வழங்கி …

கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவனை துரத்திச் சென்று பிடித்த ஆனைமலை காவல் நிலைய தலைமை காவலருக்கு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு சான்றிதழ் வழங்கி  ரூ.5,000 பரிசு வழங்கினார்.

கோவை ராமநாதபுரம் காவிரி நகர் பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் சிவக்குமார் மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு பெண் ஒருவரிடம் 10 சவரன் நகையை பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கவிதா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜரான வந்த கவிதா, கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உள்ள காத்திருப்பு பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அவருடைய கணவர் சிவக்குமார், திடீரென கவிதா மீது ஆசிட் ஊற்றிவிட்டு தப்பியோடினார்.

மற்றொரு வழக்குக்காக வந்த ஆனைமலை காவல்நிலைய தலைமைக் காவலர் இந்துமதி, சிவக்குமாரை துரத்திச் சென்று பிடித்தார். அப்போது, அங்கிருந்த வழக்கறிஞர்கள் சிவக்குமாரை தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து சிவக்குமாரை மீட்ட போலீசார், பந்தய சாலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ஆசிட் வீச்சில், படுகாயமடைந்த கவிதா உட்பட 3 பேரை போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ், ஆசிட் வீச்சு குறித்து விசாரணை மேற்கொண்டார்.

இதனையடுத்து, கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவனை தைரியமாக துரத்திச் சென்று பிடித்த ஆனைமலை காவல் நிலைய தலைமை காவலருக்கு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு சான்றிதழ் வழங்கி ரூ.5,000 பரிசு வழங்கி கௌரவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.