கும்பகோணம் அருகே பிரபல ரவுடிக்கு கத்திகுத்து

கும்பகோணம் அருகே பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையின் விசாரணை செய்து வருகின்றனர். கும்பகோணம் மாதுளம் பேட்டை தெருவில் வசிப்பவர் வினோத் குமார். இவர்…

கும்பகோணம் அருகே பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையின் விசாரணை செய்து வருகின்றனர்.

கும்பகோணம் மாதுளம் பேட்டை தெருவில் வசிப்பவர் வினோத் குமார். இவர் மீது கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது . இந்நிலையில் இன்று காலை வினோத்குமார் கும்பகோணம் ரயில் நிலையம் அருகில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சாலையில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வினோத்குமாரை கண்மூடித்தனமாக அறிவாளால் வெட்டி உள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த வினோத்குமார் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக வினோத்குமாரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி அவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். பிரபல ரவுடியை அறிவாலால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.