36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: அண்ணாமலை

ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென மத்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் எப்போதும் எதிர்ப்பு உண்டு. இந்நிலையில், ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளின் மீது தயிர் என எழுதக் கூடாது என்றும், தாஹி என்ற இந்தியில் எழுத வேண்டும் என்றும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் தாய்மொழியைத் தள்ளி வைக்கச் சொல்லும் உணவு பாதுகாப்பு ஆணையம், தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! இந்தியை திணிக்க வேண்டாம். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்! என்று எச்சரிக்கை விடுத்து பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழநாடு பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மத்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு, அதன் மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடித்தத்தில், பிராந்திய மொழியை மட்டும் பயன்படுத்தாமல் தயிர் பாக்கெட்டுகளில் “தாஹி” பயன்படுத்துமாறு அரசுக்கு சொந்தமான கூட்டுறவு பால் சங்கங்களை கட்டாயப்படுத்தி FSSAI சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் “தி இந்து” ஒரு கட்டுரையை வெளியிட்டது.

நமது பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய அரசு எப்போதும் பிராந்திய மொழிகளை ஊக்குவித்து வருகிறது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். முதன்முறையாக புதிய கல்விக் கொள்கையில் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கல்வி அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. நமது பிரதமர், பல்வேறு உலகளாவிய மன்றங்களில், செழுமையைப் பாராட்டியுள்ளார்.

அப்படியிருக்கையில், தமிழ்நாட்டில் அரசு கூட்டுறவு சங்கங்களால் தயாரிக்கப்படும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் “தாஹி” என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்ப பெறு வேண்டும்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் தலைவர் ராஜேஷ்பூசனுக்கு எழுதிய கடிதத்தில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading