பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில், “தீமிதித் திருவிழாவை”
முன்னிட்டு பால்குட ஊர்வலத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி
திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் 58வது ஆண்டு தீமிதித் திருவிழா கோலாகலமாகத் துவங்கியது. இதனை முன்னிட்டு பால்குட ஊர்வலம் கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் புண்ணிய சேகர் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து
மேளதாளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட யானை,குதிரை முன்னே செல்ல அங்கிருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியே முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி
கோயிலை வந்தடைந்தது.
இதையடுத்து அங்காள ஈஸ்வரி அம்மனைப் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
—ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்