மேகதாது குடிநீர் மற்றும் மின்சார திட்டத்திற்கு கர்நாடகா அரசுக்கு எவ்வித அனுமதியும் இப்போது வரை வழங்கவில்லை என மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை மற்றும் மின்சாரத் திட்டத்திற்கு ஒப்புதல் கோரி கர்நாடக அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்து உள்ளதா? மேலும் இத்தகைய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்குவதற்கு ஏதேனும் பரிசீலனை செய்துள்ளதா? என நாடாளுமன்றத்தின் மக்களவையில் கர்நாடகா எம்.பி சுமலதா அம்பரீஷ் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடூ, மேகதாது அருகே நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டதின் சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்தது. அதற்கு சில விதிமுறைகளுக்கு உட்பட்டு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கியது.
மேலும் அனுமதி வழங்கப்பட்டதன் பேரில் 2019ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் சமர்ப்பித்த கர்நாடகா அரசு, இத்திட்டம் குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கவும் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டது.
ஆனால் இரண்டு மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பும் விவாதத்திற்கு தேவை என்பதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரை இத்திட்டம் தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என மத்திய அரசின் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.