கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

மசோதா விவகாரத்தில் காலம் தாழ்த்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல்,  மாநில ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக கேரள…

மசோதா விவகாரத்தில் காலம் தாழ்த்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல்,  மாநில ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக கேரள மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

அதனை தொடர்ந்து மனுவில், கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட 8 மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இவற்றில் சில மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது கூறிப்பட்டிருந்தது. 

இதையும் படியுங்கள்:சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்கள்; மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!

இது மாநில மக்களின் உரிமையை மீறுவதாக உள்ளது என கேரள அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்விவகாரத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க கேரள ஆளுநரின் கூடுதல் செயலர்,  மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.