மகளிர் உரிமை திட்டத்தில் தேவையுள்ள ஒருவர் கூட விடுபட்டு விடக் கூடாது : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் 

தேவையுள்ள ஒருவர் கூட விடுபட்டு விடாமல் மகளிர் உரிமை தொகை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட அறிவுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும்…

தேவையுள்ள ஒருவர் கூட விடுபட்டு விடாமல் மகளிர் உரிமை தொகை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட அறிவுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் என சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவது  குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையிலும், அவரது நூற்றாண்டு விழாவுக்கு மேலும் பெருமை சோ்க்கும் விதத்திலும்,  இந்த திட்டம்  ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம்’ என அழைக்கப்படும் என அறிவித்தார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“உரிமைத்தொகை மட்டுமல்ல; உயிர்த்தொகை! தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய திட்டம் இது!
தேவையுள்ள ஒருவர் கூட விடுபட்டுவிடாமல் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட அறிவுறுத்தியுள்ளேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.