இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு : கனடாவின் ஆனி கர்சனுக்கு அறிவிப்பு!

இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு கனடாவை சேர்ந்த ஆனி கர்சனுக்கு வழங்கப்பட்டது.

ஆண்டு தோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 5ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவத்திற்கான நோபல் விருதுக்கு, கார்ல் டைசெரோத் (Karl Deisseroth), பீட்டர் ஹெகேமன் (Peter Hegemann) மற்றும் ஜார்ஜ் நாகல் (Georg Nagel) ஆகிய 3 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று முன்தினம் 2026 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு பிரான்சிஸ் ஹால்சன்(Francis Halzen) என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு கனடாவை சேர்ந்த ஆனி கர்சனுக்கு வழங்கப்பட்டது. சமகால இலக்கியத்திற்கு புதிய வடிவங்களை உருவாக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.