முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவில் ஓபிஎஸ்-ஐ இணைக்க 1% கூட வாய்ப்பில்லை-இபிஎஸ்

அதிமுகவுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த ஓ.பி.எஸ் எப்படி அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க முடியும். இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ இணைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அதிமுக 51ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் உரையாற்றிய கே.பி.முனுசாமி, அதிமுக எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே பல சோதனைகளை கண்டது. எம்.ஜி.ஆரை கொலை செய்ய கூட முயற்சி செய்தார்கள். அதையும் கடந்து எம்.ஜி.ஆர் மறையும் வரை முதல்வராக இருந்தார். 4 ஆண்டுகளில் திமுகவின் 26,000 போராட்டத்தை சமாளித்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வந்துள்ளோம் என்று கூறினார்.

தொடர்ந்து அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாம் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணகிரியில் பாதி சட்டமன்ற தொகுதியியை வென்றுள்ளோம். ஒரு சில மாவட்டத்தில் வென்று இருந்தால் இன்று ஆளும் கட்சியாக அதிமுக இருந்து இருக்கும். சற்று உழைப்பு குறைவாக இருந்த காரணத்தால் இன்று ஸ்டாலின் முதல்வராகிவிட்டார்.

51வது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடி வருகிறோம் இதில் 31 ஆண்டு நாம் ஆட்சி செய்து உள்ளோம். எம்.ஜி.ஆர்க்கும், ஜெயலலிதாவுக்கும் குடும்பம் கிடையாது. நம்மை தான் குடும்பமாக நினைத்தார்கள். அதனால் தான் நமக்காக இத்தனை திட்டங்களை கொண்டு வந்தார். ஓலா எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது. இது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகும்.

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.400 கோடி மதிப்பில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை அதிமுக ஆட்சியில் கொடுத்தோம். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நான் கிளை செயலாளராக இருந்து தற்போது இந்த பொறுப்பிற்கு வந்து உள்ளேன். அதனால் ஒரு ஒரு பொருப்பாளருக்கு என்ன கஷ்டம் என்பது எனக்கு நன்கு புரியும்.

10 முறை அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு உள்ளேன். சட்டமன்றத்தின் வெளியில் வந்து சட்டையை கிழித்து கொண்டு ஸ்டாலின் சாலையில் அமர்ந்தார். அவர் சட்டையை யாரும் தொடவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அதிமுக ஆட்சியை வீழத்த வேண்டும் என அதிமுகவுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த ஓ.பி.எஸ் எப்படி அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க முடியும். இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ இணைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது.

வாய்ப்பு கொடுக்கும் போது எல்லாம் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் ஓ.பி.எஸ். எனக்கு வரும் வழியில் எல்லாம் உற்சாக வரவேற்பு, எனக்கு மலர் அபிஷேகம் செய்தீர்கள். இதை எல்லாம் ஸ்டாலின் நேரலையில் பார்த்து கொண்டு இருப்பார். இது சாதாரண கொடியேற்று விழா, இதில் 50 ஆயிரம் பேர் திரண்டு உள்ளனர். திமுகவை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் ஸ்டாலின். 6 மாதம் முன்பு சர்வாதிகாரியாக இருப்பேன் என கூறிய ஸ்டாலின் இப்போது தூக்கமே போய்விட்டது என்கிறார்.

ஒரு கட்சிக்கே தலைமை பொறுப்பை ஸ்டாலினால் ஏற்க முடியவில்லை. எங்களை போல் சாதாரண குடும்பத்தில் இருந்தா ஸ்டாலின் வந்தார். அவரது அப்பாவின் செல்வாக்கில் ஸ்டாலின் முதல்வனார். ஸ்டாலின் போல் செல்வ செழிப்பில் இந்த பதவிக்கு வரவில்லை. அதனால் தான் ஸ்டாலின் பொம்மை போல் செல்வார். ஸ்டாலினால் கட்சியும் நடத்தமுடியவில்லை, ஆட்சியும் நடத்த முடியவில்லை. அதனால் தான் அவரை பொம்மை முதல்வர் என்கிறோம்.

எப்போது திமுக போகும் என்ற குரல் தான் தமிழகம் முழுவதும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. எத்தனை வழக்கு போட்டாலும் அதை சட்ட ரீதியாக வெல்லும் திரானி அதிமுகவிடம் உள்ளது. இதற்கான பின் விளைவுகளை சந்திப்பீர்கள். அடுத்து வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தான் வெல்லும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெல்லும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடன் தகராறு; 15 வயது சிறுவன் கொலை

G SaravanaKumar

இலங்கை பொருளாதார நெருக்கடி: 8 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வருகை

Web Editor

இனிதே நடந்து முடிந்த நம்ம ஊரு திருவிழா

G SaravanaKumar