“ஈரோட்டில் பெரியாருக்கு 3 சிலைகள் அல்ல 300 சிலைகள் வைக்கலாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு பெரியார் பிறந்த மண் என்றும், இங்கு 3 சிலைகள் அல்ல பெரியாருக்கு 300 சிலைகள் வைக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   ஈரோடு மாவட்ட திமுக துணை செயலாளர் செந்தில்குமார் இல்லத்திருமண…

ஈரோடு பெரியார் பிறந்த மண் என்றும், இங்கு 3 சிலைகள் அல்ல பெரியாருக்கு 300 சிலைகள் வைக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

ஈரோடு மாவட்ட திமுக துணை செயலாளர் செந்தில்குமார் இல்லத்திருமண விழா ஈரோடு மேட்டுக்கடையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மழை பெய்து வருகிறது என்றார். இதனால் நமது ராசி தண்ணீர் கஷ்டமே இல்லை என கூறினார்.

இது பெரியார் பிறந்த மண் என்றும், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் குருகுலம் என்ற அவர் இந்த மாவட்டத்தில் பெரியாருக்கு 3 சிலைகள் இல்லை 300 சிலைகள் கூட வைக்கலாம் என்றார். திமுக ஆட்சிக்கு வரும் முன் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி கொண்டிருக்கும் ஆட்சி தான் இது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், செந்தில் பாலாஜி, மற்றும் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.