முக்கியச் செய்திகள்

”வடமாநில தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம்” – திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன் குமார்

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை மாநகர காவல் ஆணையர் சந்தித்து வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று எடுத்துரைத்தார்.

கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகின. இது திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் நடந்ததாக நினைத்து, பீகாரைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் அச்சமடைந்தனர். இதனால் அவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், திருப்பூரில் அமைதி நிலை இருப்பதையும், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என்பதையும் அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், திருப்பூர் மாநகரில் உள்ள பல்வேறு பின்னலாடை நிறுவனங்களில் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு தலைமையில் காவல்துறையினர் நேரில் சென்று, அங்குள்ள வடமாநில தொழிலாளர்களை சந்தித்தனர்.

இதையும் படியுங்கள் : நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் – திருமாவளவன்

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் திருப்பூரில் நடைபெற்றது இல்லை எனவும், திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல்வேறு மொழிகளில் பேசக்கூடிய தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும், ஏதேனும் அச்சம் இருப்பின் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தங்கள் அச்சத்தை போக்கிக் கொள்ளலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, “சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் எதுவும் திருப்பூரில் நடைபெற்றது அல்ல. சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் போன்று, உண்மையில் இங்கு எதுவும் நடக்கவில்லை. அனைத்து தரப்பு தொழிலாளர்களும் அமைதியாக இருந்து வருகின்றனர். சைபர் கிரைம் காவல்துறை சார்பில் வதந்தி பரப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கல்வெட்டுக்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

EZHILARASAN D

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சக்கர நாற்காலியில் பேரணி!

Halley Karthik

ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டு சாலையோரம் காரை நிறுத்த உத்தரவிட்ட பிரதமர் மோடி

EZHILARASAN D