வடகிழக்கு பருவமழை : சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

சென்னையின் 15 மண்டலங்களிலும் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையின் 15 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 1 ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

“மண்டலம் 1. திருவொற்றியூர் கே. பாலசுப்ரமணியம், IAS

மண்டலம் 2. மணலி – பி. குமரவேல் பாண்டியன், IAS

மண்டலம் 3. மாதவரம் எஸ். அருண்ராஜ், IAS

மண்டலம் 4. தண்டையார்பேட்டை – ஆர். கண்ணன், IAS

மண்டலம் 5. ராயபுரம் ஆஷா அஜித், IAS

மண்டலம் 6. திரு.வி.க. நகர் பி. கணேசன், IAS

மண்டலம் 7. அம்பத்தூர் கே. விவேகானந்தன், IAS

மண்டலம் 8. அண்ணாநகர் பி. காயத்ரி கிருஷ்ணன், IAS

மண்டலம் 9. தேனாம்பேட்டை டி. கிறிஸ்துராஜ், IAS

மண்டலம் 10. கோடம்பாக்கம் எஸ். கோபால சுந்தர ராஜ், IAS

மண்டலம் 11. வளசரவாக்கம் டாக்டர் ஜெ. விஜயா ராணி, IAS

மண்டலம் 12. ஆலந்தூர் வாகே சங்கெத் பால்வந்த், IAS

மண்டலம் 13. அடையாறு டாக்டர் கே. செந்தில் ராஜ், IAS

மண்டலம் 14. பெருங்குடி மகேஸ்வரி ரவிக்குமார், IAS

மண்டலம் 15. சோழிங்கநல்லூர் -டி. பாஸ்கர பாண்டியன், IAS இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.