புதுக்கோட்டையில் சேமத்து முனீஸ்வரர் 14ம் ஆண்டு அபிஷேக விழவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.குளவாய்பட்டியில் உள்ள சேமத்து முனீஸ்வரர் 14ம் ஆண்டு அபிஷேக ஆராதனை மற்றும் மழை மாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு
ஊர் பொதுமக்கள் சார்பில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடை பெற்றது.
இதில் மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான் மாடு
பூஞ்சிட்டு மாடு என நான்கு பிரிவுகளிலும் அதேபோல் குதிரை வண்டி பந்தயத்தில்
பெரிய குதிரை நடு குதிரை என இரண்டு பிரிவுகளிலும் பந்தயம் நடை பெற்றது.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 76 ஜோடி மாட்டு வண்டிகளும் 30 குதிரை வண்டிகளும் பங்கேற்றன.
விமர்சையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி மற்றும் குதிரை
வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.50,000 வரையிலான ரொக்க
பரிசுகளும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டன.







