காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு மும்பையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வைர வளையலை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மகாசக்தி பீடங்களில் ஒன்றாகும். இக்கோயிலின் மூலவர் காமாட்சி அம்மனுக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அஜய் கிருஷ்ணமூர்த்தி வைர வளையலை காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.
தொழிலதிபர் அஜய் கிருஷ்ணமூர்த்தி சார்பில், சென்னையைச் சேர்ந்த ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் என்.நடராஜன், கோவில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேசு ஐயரிடம் வைர வளையலை காணிக்கையாக வழங்கினார். இந்த வளையலின் மதிப்பு ரூ. 1.58 லட்சம் ஆகும். இதன் எடை 21.868 கிராம்.
இதையும் படிக்க: ஹிந்து கோயிலில் திருமணம் செய்த இஸ்லாமிய ஜோடி…
இந்த வைர வளையலை காணிக்கையாக வழங்கியபோது காஞ்சி நகர வரவேற்புக் குழுவின் தலைவர் டி.கணேஷ், நிர்வாகிகள் பாபு, ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து, வைர வளையல் காமாட்சி அம்மனுக்கு சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
-ம.பவித்ரா








