திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணனுக்கு இருக்கை வழங்காதது இந்த திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் அரசு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் வட்டாட்சியர் கண்ணனுக்கு இருக்கை வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணனுக்கு இருக்கை வழங்காதது இந்த திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம் எனவும், அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் இருக்கை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த விழாவில் துணை வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர் அதுமட்டுமின்றி அங்கு வந்திருந்த திமுகவினருக்குக் கூட இருக்கை வழங்கப்பட்டது எனத் தெரிவித்துள்ள அவர், அரசு பிரதிநிதி ஒருவருக்கு இருக்கை இல்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளதோடு, சமூகநீதி, சமத்துவம் எனப் போகும் இடமெல்லாம் தம்பட்டம் அடிக்கும் திமுகவின் முகத்திரைக்குப் பின்னால் இருக்கும் சாதிய கோட்பாட்டை இந்த நிகழ்வும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், இதற்கு முதலமைச்சரின் பதில் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணன் அவர்களுக்கு இருக்கை வழங்காதது இந்த @arivalayam அரசின் சாதிய வன்மத்தின் உச்சம்.
அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் இருக்கை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. (1/3)
— K.Annamalai (@annamalai_k) August 19, 2022








