இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2022ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த விஞ்ஞானிகள் மூவருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல் முதலிய பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.…

2022ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த விஞ்ஞானிகள் மூவருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல் முதலிய பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளான நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆலன் ஏஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எஃப்.கிளாசர், மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்டன் ஜெய்லிங்கர் ஆகியோருக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது. இவர்கள் மூவரும், போட்டான்கள் குறித்த சோதனை, பெல் சமநிலையற்ற தன்மையில் ஏற்படும் கூறுகள், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகியவற்றில் மேற்கொண்ட ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நாளை வேதியியலுக்கும், வியாழக்கிழமை இலக்கியத்துக்குமான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிரிவுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.