ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்

தனது ஆட்சி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர், சபாநாயகர் என யாருடைய தலையீடும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, ‘புதுச்சேரி மாநிலத்தில் மக்கள்…

தனது ஆட்சி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர், சபாநாயகர் என யாருடைய தலையீடும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, ‘புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், சிறப்பாகவும் வாழ அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், அறிவித்த அனைத்து திட்டங்களை செயல்படுத்த அரசு முனைப்போடு உள்ளதாகவும் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருவதாகவும், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், பண்டிகை காலங்களில் வழங்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஆதிதிராவிடர்களுக்கு இலவச வேட்டி சேலைக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்த முதல்வர் ரங்கசாமி, தீபாவளியை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ3500, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார், தொடர்ந்து பேசிய முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியில் முழு பால் உற்பத்தி கியைாது என்றும் அண்டை மாநிலங்களிலிருந்து தான் பெரும்பாலான பால் கொள்முதல் செய்யப்படுகிறது, மழை மற்றும் பண்டிகை காலம் என்பதால் பால் தட்டுப்பாடு நிலவியதாகவும், தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் புதுச்சேரி அரசின் நிறுவனமான பான்லேவை தனியார் மயமாக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது என தெரிவித்தார்.

புதுச்சேரி ஆட்சி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் மற்றும் சபாநாயகர் தலையிடுவதாக எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளத்த முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி ஆட்சி நிர்வாகத்தில் யாருடைய தலையீடும் இல்லை என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.