முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வனப்பகுதியில் சாலையோரம் உள்ள சுவாமி சிலைகள் மீது இருந்த பூக்களை எடுத்து காட்டு யானை ஒன்று தன் மீது போட்டுக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உதகையிலிருந்து மைசூர் செல்லும் சாலையோரம் வன தண்டு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. நாள்தோறும் இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இந்த கோயிலில் உள்ள சுவாமி சிலைகளுக்கு பூ வைத்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், சுவாமி சிலைகள் மீது பூ இருந்ததை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று பார்த்து கொண்டது. பின்னர் ஒய்யாரமாக நடந்து வந்த அந்த யானை, சுவாமி சிலைகள் மீது இருந்த பூக்களை தும்பிக்கையில் எடுத்து தன் மீது போட்டுக்கொண்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இணையதளங்களில் இந்த வீடியோக்களை பதிவிட்டு சிலர் விநாயகனே அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார் என பதிவிட்டு வருகின்றனர்.








