ஜனவரி 6 கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் நல்லவர்கள் அல்ல – டிரம்பிற்கு பதிலடி கொடுத்த ஜோ பைடன்!

ஜனவரி 6 கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் நல்லவர்கள் அல்ல என டிரம்பின் ஆதரவாளர்களை குற்றம்சாட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி…

ஜனவரி 6 கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் நல்லவர்கள் அல்ல என டிரம்பின் ஆதரவாளர்களை குற்றம்சாட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அதிபரானார். பின்னர் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்ததால், ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக உள்ளார். அதிபர் தேர்தலில் தான் தோல்வி அடைந்ததை தான் ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும் முன்னாள் அதிபர் டிரம்ப் கூறிவந்தார்.

அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்பின் தோல்வியை தொடர்ந்து 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ஆம் தேதி அமெரிக்காவில் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகைக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

தற்போதைய அதிபர் ஜோ பைடன் கலவர வீடியோவை மேற்கோள்காட்டி ட்விட்டரில்  தற்போது பதிவிட்டுள்ளார். ஜனவரி 6 கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் நல்லவர்கள் அல்ல. இதுவே கதையின் முடிவு” என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, 2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜோ பைடனும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள சம்பவம் அமெரிக்க அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.