நீர்வீழ்ச்சி போல பீறிட்டு அடிக்கும் குடிநீர்: வீணாகும் தண்ணீரால் பொதுமக்கள் வேதனை!

கன்னியாகுமரி மாவட்டம் கோழிபோர்விளை பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் திடீரென ஏற்பட்ட உடைப்பால் நீர் பெருக்கெடுத்து வெளியேறியது; இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை பகுதியில் இருந்து இரணியல்…

கன்னியாகுமரி மாவட்டம் கோழிபோர்விளை பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் திடீரென ஏற்பட்ட உடைப்பால் நீர் பெருக்கெடுத்து வெளியேறியது; இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை பகுதியில் இருந்து இரணியல் பகுதிக்கு
கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சாலையோரம் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கோழிப்போர்விளை அமராவதி குழத்தின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த
ராட்சத இரும்பு குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் குடிநீர் திடீர் நீரூற்று போல
கொட்டியது. சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் வரை தண்ணீர் மிகுந்த
அழுத்தத்துடன் பீறிட்டு எழுந்ததால் பொது மக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சாலையில் கடந்து செல்லும் இருசக்கர வாகனங்க ஓட்டிகள் திடீர் நீரூற்றில் நனைந்தபடியே சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.