முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை: ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழ்நாட்டில் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என அவரிடம் வலியுறுத் தினார்.

பின்னர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராதா கிருஷ்ணன், தமிழ்நாட்டில் யாருக்கும் ஜிகா வைரஸ் தொற்று இல்லை என தெரிவித்தார். ஜிகா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ராதாகிருஷ்ணன், ஜிகா வைரசை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழ்நாட்டிற்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்டை மாநிலமான கேரளாவில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. ஏற்கனவே கொரோனா படுத்தி எடுக்கும் நிலையில், இந்த ஜிகா வைரஸ் அடுத்த பீதியை கிளப்பி இருக்கிறது. கேரளாவில் இதுவரை 14 பேருக்கு ஜிகா வைரஸ் அறியப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

முதல்வர் பதவியை தக்க வைக்க பிரதமரை ஆதரிக்கிறார் பழனிசாமி : முருகவேல் ராஜன்!

Halley karthi

நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து திரிணாமூல் எம்.பி இடைநீக்கம்

Vandhana

தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஸ்டாலின் பெற்று வருவார்: செல்லூர் ராஜூ

Gayathri Venkatesan