புதிதாக டாஸ்மாக்குகள் ஏதும் திறக்கப்படவில்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் புதிதாக டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படுவதில்லை என்று மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதமானது நடைபெற்று வருகிறது. இன்று தொழில்துறை, மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும்…

தமிழ்நாட்டில் புதிதாக டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படுவதில்லை என்று மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதமானது நடைபெற்று வருகிறது. இன்று தொழில்துறை, மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வரப்படும் என்று அறிவித்து 500 கடைகள் மூடப்பட்டதாகவும், அதே போல டாஸ்மாக் கடைகளின் நேரத்திலும் மாற்றம் செய்தார். அதோடு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது 500 கடைகளை மூடியதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போது புதிய கடைகள் திறக்கப்படுவதாகவும், பாரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதாக குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்து பேசிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் எங்கும் பூரண மதுவிலக்கு குறித்து தெரிவிக்கவில்லையென்றும், தமிழ்நாட்டில் 5,350 டாஸ்மாக் இருப்பதாகவும், புதிய கடைகள் எங்கும் திறக்கப்படவில்லை என்று கூறினார். மேலும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மூடப்படும் கடைகள் தான் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.