இனி புதிய உறுப்பினர்களுக்கு பழைய செய்திகளை தனித்தனியாக அனுப்ப தேவையில்லை…….. வாட்ஸ் அப் வெளியிட்ட அசத்தல் அப்டேட்……!

வாட்ஸ் அப் செயலியான குரூப் ஹிஸ்ட்ரி தொடர்பான புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாம் தற்போது எலக்ட்ரானிக் யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். செய்திகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் வாட்ஸ் அப், மெசேஜ் போன்ற செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் வாட்ஸ் அப் செயலியான குரூப் ஹிஸ்ட்ரி தொடர்பான புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் வாட்ஸ்அப் குழுக்களில் புதிதாக சேருப்பவர்கள், தாங்கள் இணைவதற்கு முன்பு பகிரப்பட்ட முந்தைய செய்திகளை பார்க்க முடியும்.

இது தொடர்பாக வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள தகவலின் படி,

* குழுவில் சேரும் புதிய நபர் இந்த அம்சத்தின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் பகிரப்பட்ட 25 முதல் 100 செய்திகள் வரை பார்க்க முடியும்.

* புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பொழுது அட்மின்கள் அல்லது உறுப்பினர்கள் இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம்.

* பகிரப்படும் பழைய மெசேஜ்களும் மற்ற மெசேஜ்களைப் போலவே எண்ட்-டு- எண்ட் என்க்ரிப்ட்(end-to-end encrypted) செய்யப்பட்ட பாதுகாப்பான அம்சமாகும்.

* புதிய உறுப்பினர்களுக்கு பழைய செய்திகள் தெரிய வேண்டுமா என்பதைக் குழு அட்மின்கள் முடிவு செய்யலாம். மேலும் எவ்வளவு வரலாறு பகிரப்பட வேண்டும் என்பதையும் குழு அட்மின்கள் முடிவு செய்யலாம்.

* குழு அட்மின்கள் இந்த அம்சத்தை குழு அமைப்புகளில் (group settings) முடக்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

* செய்திகள் பகிரப்படும் குழுவில் உள்ள அனைவரும் இதைப் பற்றிய அறிவிப்பை பெறுவார்கள்.

புதிய உறுப்பினர்களுக்கு பழைய செய்திகளை தனித்தனியாக அனுப்பும் சிரமத்தை இந்த வசதி குறைக்கிறது. இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்குப் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. உங்கள் வாட்ஸ்அப் செயலியைப் புதுப்பிப்பதன் மூலம் (Update) இந்த வசதி உங்களுக்குக் கிடைத்துள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.