மாதம் ரூ.1,60,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை……. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…….? – முழு விவரம்..!

நெடுஞ்சாலை துறையின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் நிதி மற்றும் கணக்கு பிரிவில் உள்ள டெபியூட்டி மேனேஜர் பதவிக்கன காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

மத்திய அரசின் நெடுஞ்சாலை துறையில் டெபுட்டி மேனேஜர் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நெடுஞ்சாலை துறையின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் நிதி மற்றும் கணக்கு பிரிவில் உள்ள டெபியூட்டி மேனேஜர் பதவிக்கன காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

டெபியூட்டி மேனேஜராக தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இப்பணிக்கான விண்ணப்பம் ஆன்லைன் வழியாக பிப்ரவரி 28-ம் தேதி காலை 10 மணி முதல் தொடங்கப்படுகிறது. மார்ச் 27-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் எத்தனை….?

டெபியூட்டி மேனேஜர் பதவியில் மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில்  பொதுப்பிரிவு – 8,  எஸ்சி – 2,  எஸ்டி – 1,  ஒபிசி – 3,  பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 1 என நிரப்பபடுகின்றன.

கல்வி மற்றும் வயது 

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபடியாக 34 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதியை பொறுத்த வரை சிஏ, சிஎம்ஏ, எம்.காம், எம்பிஏ அல்லது இதற்கு நிகரான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை என்ன..?

இரண்டு கட்ட தேர்வு முறை மூலம் இப்பணியிடங்களுக்கு  ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். முதல் கட்டத்தில் திறன் சோதனைக்காக கொள்குறி வகையில் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வாகும் நபர்களுக்கு முதன்மை பாடத்திற்கான தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வாகும் நபர்களுக்கான பட்டியல் வெளியிடப்படும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது…..?

ஆர்வலுள்ளவர்கள் இப்பணிக்கு  https://www.nhidcl.com/en/current-jobs என்கிற இணைப்பு மூலம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்விற்கான பாடத்திட்டமும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விண்ணப்பக் கட்டணம் குறித்து தகவல் இடம்பெறவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.