தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு சிறப்பு சலுகைகளை எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாலிசிதாரர்கள் (044) 2861 1642, 2861 1912, 2533 1915, 2533 1914 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் வீடுகளுக்கு வந்து சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.







