முக்கியச் செய்திகள்

பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

திருச்சி திருவெறும்பூர் சட்ட மன்றத் தொகுதிக்கு உள்பட்ட காட்டூரில் உள்ள தனியார்
மகாலில் தனது சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிகழ்ச்சியில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், கல்வித் துறை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய அரசு எப்பொழுதும் கடைசி நேரத்தில் தான் நம்மை அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் கல்வித் துறை தொடர்பான பல்வேறு நிகழ்சிகளை முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் நடத்தி வருகிறோம். அதுமட்டுமல்லாமல் நம் மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை நாம் முடிவு செய்யும்
கூட்டத்திற்குதான் முக்கியத்துவம் தருவோம். அது தான் நம் மாநிலத்திற்கும்
நல்லது.

பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. கொரொனா பரவல் அதிகரித்து வரும்
நிலையில் அதில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது விதிமுறைகள் பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டால் அதை பின்பற்றுவோம். நீட் தேர்வை நடத்துவதே பா.ஜ.க. அரசு தான், ஆனால் அண்ணாமலை அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமே என நம்மிடம் கூறுகிறார் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

யூரோ காலபந்து: பிரான்ஸ் அணியை வீழ்த்திய சுவிட்சர்லாந்து

கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தின் புதிய அப்டேட்!

EZHILARASAN D

தனது மகளின் தலையை வெட்டி எடுத்த தந்தை; உ.பியில் கொடூரம்!

Halley Karthik