முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் இதுவரை ‘ஓமிக்ரான்’ கண்டறியப்படவில்லை – மத்திய அமைச்சர்

இந்தியாவில் இதுவரை ‘ஓமிக்ரான்’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 26,21,50,955 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 52,07,350 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஏறத்தாழ 50 முறை இந்த B.1.1.529 எனும் கொரோனா வைரஸ் மரபியல் மாற்றமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல இது வேகமாக பரவும் என்றும், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

உலக சுகாதார அமைப்பு இந்த B.1.1.529 வகை வைரசுக்கு ‘ஓமிக்ரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு உலக நாடுகள் விமான போக்குவரத்தில் பெரும் கட்டுப்பாடுகளை விடுத்துள்ளன.

பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இதுவரை ஓமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, அவையில் பேசிய மாண்டவியா, “இந்தியாவில் இதுவரை ‘ஓமிக்ரான்’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை. சந்தேகத்திற்கிடமானவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு மரபணு வரிசைமுறை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. எந்த சூழலையும் சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “தற்போது நம்மிடம் அதிக அளவில் பரிசோதனை வசதிகள் உள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனியார் ஊடகத்திற்கு நேற்று பேட்டியளித்த ஐசிஎம்ஆரின் தொற்று நோயியல் பிரிவு தலைவர் சமீரன் பாண்டா, “இந்தியாவில் இந்த தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது.” என்று கூறியிருந்தார்.

இந்த தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்த ஏற்கெனவே அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் டிச.31 வரை நாடு முழுவதும் நீட்டிக்கப்படும் என மத்திய உள்துறை அசைமச்சகம் அறிவித்திருக்கிறது. அதேபோல சுகாதாரத்துறை மிக கவனமாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில மற்றும் யூனி பிரதேச சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பரிசோதனைகளை அதிகரித்தல் மற்றும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிதல் உள்ளிட்ட செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு

EZHILARASAN D

இன்று மாலைக்குள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு

EZHILARASAN D

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்!

Web Editor