பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் அனஸ்தசியா பாவ்லியூ செங்கோவா மற்றும் செக் குடியரசின் கிரெஜ்சிகோவா மோதினர். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி, பார்போரா கிரெஜ்சிகோவா வெற்றி பெற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்மூலம், முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று பார்போரா கிரெஜ்சிகோவா அசத்தியுள்ளார். செக் குடியரசு நாட்டில் இருந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது நபர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.