நீலகிரி மலை ரயில் சேவை நாளையும், நாளை மறுநாளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து உதகைக்கு தினமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் – குன்னுாா் இடையே, ‘மீட்டா் கேஜ்’ பாதையில், ‘எக்ஸ் கிளாஸ்’ இன்ஜின்களால் 15 கி.மீ. வேகத்துக்கு குறைவாக இயக்கப்படும் மலை ரயிலில் பயணிப்போா், இயற்கை காட்சிகளை ரசித்து செல்கின்றனா். எனவே இந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தண்டவாள பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மழையால் சீரமைப்பு பணியும் தாமதமாவதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.







