தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ், ராஜ் கிரண் நடித்த ‘பவர் பாண்டி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனைத்…

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தனுஷ், ராஜ் கிரண் நடித்த ‘பவர் பாண்டி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த ‘ராயன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ உருவாகியுள்ளது. மேலும் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது.

இதையும் படியுங்கள் : ‘தேர்தலில் வெற்றிபெற பழங்குடியினர் அல்லாதவர் வாக்குகள் தேவையில்லை’ என ஹேமந்த் சோரன் கூறினாரா? உண்மை என்ன?

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘கோல்டன் ஸ்பாரோ’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் அடுத்த பாடலான காதல் பெயில் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

https://twitter.com/Dhanush_Trends/status/1860335762497241512?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1860335762497241512%7Ctwgr%5Ed0a0c209a8d2ff42b176e1bf1b18afb0c271e925%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2Fcinema%2Fcinemanews%2Fthe-moon-is-angry-with-me-shooting-completed-1131947

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.