சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட சரிவுகள் இந்தியாவிலும் எதிரொலித்ததால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது முதலே இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது. மாலையில் வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 396 புள்ளிகள் குறைந்து , 60 ஆயிரத்து 322 ஆகவும், தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிப்டி, 110 புள்ளிகள் குறைந்து, 17 ஆயிரத்து 999 புள்ளிகளில் நிலை கொண்டு வர்த்தகம் நிறைவடைந்தது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று சரிவைச் சந்திக்க காரணமாக, சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட சரிவுகள், கணிப்புகளை தாண்டி அதிகரிக்கும் பணவீக்க விகிதம், அமெரிக்க டாலரின் அதிகமான மதிப்பு ஆகிய நிகழ்வுகளின் தாக்கம், இந்திய சந்தைகளில் எதிரொலிப்பதால் சரிவுகள் சில நாட்களாக தொடர்கின்றன.