மறைந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறையின் முன்னாள் அதிகாரி நல்லம நாயுடு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை விசாரணை செய்த, ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அதிகாரி நல்லமநாயுடு. ஊழல் தடுப்பு – கண்காணிப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நல்லம நாயுடு, சென்னை பெரவள்ளூர் வசித்து வந்தார்.
அவருக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். அவரது உடல், சொந்த ஊரான தேனி மாவட்டம் சுப்பு நாயக்கன்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர், இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில், நல்லம்ம நாயுடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.








