கோவையில் மிக பிரம்மாண்டமான முறையில் தொடங்கிய, நியூஸ் 7 தமிழ் கல்விக் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கடந்த ஆண்டு கோவையில் நியூஸ் 7 தமிழ் சார்பில் கல்வி கண்காட்சி நடைபெற்றது. அக்கண்காட்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த ஆண்டும் கோவையில் கல்வி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கொடிசியா அரங்கில் வெகுவிமரிசையாக கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது.
நியூஸ் 7 தமிழின் இந்த கல்வி கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில், 40க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. மேலும், தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெறுவதற்கான அரங்குகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படியுங்கள் : உயர்கல்வியில் எல்லா துறைகளும் நல்ல துறை தான் – பார்க் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் சிஇஓ அனுஷா ரவி
கல்வி கண்காட்சி வாயிலாக உடனடி மாணவர் சேர்க்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, மாணவர்கள் வசதிக்காக கோவையில் ஆர்ச் முதல் கொடிசியா அரங்கம் வரை நியூஸ் 7 தமிழ் சார்பில் இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கல்வி கண்காட்சியின் முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
சிறந்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சி வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். உயர்கல்வி குறித்த பல்வேறு தகவல்களை அறிந்துகொண்டதாக கூறிய மாணவர்கள், கண்காட்சியால் தங்களின் குழப்பம் தீர்ந்ததாக தெரிவித்தனர்.







