தேனி மக்களவை தொகுதி தேர்தலை எதிர்த்து வழக்கு – நேரில் சாட்சியம் அளித்த எம்பி.ரவீந்திரநாத்

தேனி மக்களவை தொகுதி தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எம்.பி.ரவீந்திரநாத் நேரில் சாட்சியம் அளித்தார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து…

தேனி மக்களவை தொகுதி தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எம்.பி.ரவீந்திரநாத் நேரில் சாட்சியம் அளித்தார்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்து வருகிறார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில் எம்பி ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அண்மைச் செய்தி : மார்ச் 20-ல் வெளியாகிறது பொன்னியின் செல்வன்-2 முதல் பாடல்

அவரிடம் நிறுவனம் ஒன்றின் இயக்குனராக இருந்தது, வங்கியில் கடன் வாங்கியது, வாக்களர்களுக்கு பணம் அளித்ததாக வழக்கு பதிவு செயப்பட்டது உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அனைத்து கேள்விகளுக்கும் சாட்சி கூண்டில் ஏறி பதிலளித்த ரவீந்தரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.ரவீந்திரநாத்திடம் நடத்தப்பட்ட  விசாரணை நிறைவடைந்த நிலையில் வழக்கு விசாரணை  ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.