நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களை தாண்டி, தனியார் நிறுவனங்களிலும் தடம் பதித்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த டெக்கான் இண்டஸ்ட்ரீஸ் தொழில் நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கும் நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மகளிரை போற்றும் விதமாகவும், பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாகமாகவும் கோவையில் ஆண்கள் மட்டுமே பணிபுரியும் பிரபல தொழில் நிறுவனமான, டெக்கான் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் நியூஸ் 7 தமிழின் ‘நிகரென கொள், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் 100-க்கு மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு பாலின சமத்துவ உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
செங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளி
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நியூஸ்7 தமிழின் ’நிகரென கொள் 2023’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று, பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து மாதவிடாய் விடுமுறைக்கான கையெழுத்து இயக்கத்திலும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
ராகிணிப்பட்டி சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி
சிவகங்கை மாவட்டம், ராகிணிப்பட்டி சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில், 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றதோடு , கையெழுத்து இயக்கத்திலும் கையொப்பமிட்டனர்.
புதுக்கோட்டை அருள்மிகு ஸ்ரீபிரகதாம்பாள் மேல்நிலைப் பள்ளி
புதுக்கோட்டை அருள்மிகு ஸ்ரீபிரகதாம்பாள் மேல்நிலைப் பள்ளியில் ” நிகரெனக் கொள்” பாலின சமத்துவ விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றதோடு , கையெழுத்து இயக்கத்திலும் கையொப்பமிட்டனர்.
வடபுதுபட்டி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
தேனி மாவட்டம், வடபுதுபட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றனர்.
கல்லூரியின் முதல்வர் டாக்டர் சி.மதலை சுந்தரம் தலைமை ஏற்று உறுதிமொழியினை வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் 800-ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் பங்கேற்று மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா










