பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் நிகரென கொள் என்னும் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக திருச்செந்தூர், ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் செண்பகவள்ளி உள்ளிட்ட ஏராளமனோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் சார்பில் மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஊழியர்கள் உள்ளிடோர் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறை வழங்க வலியுறுத்தி ஏராளமானோர் கையெழுத்திட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆசிரியர்களும் மாணவர்களும் பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் சார்பில் மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டுப்பட்டி சீதா ராஜாராம் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் காயத்ரிதேவி சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, பாலின சமத்துவத்திற்கான அவசியம் குறித்து கல்லூரி முதல்வர் காயத்ரி தேவி சந்திரமோகன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வதேச கலாம் அறக்கட்டளை தலைவர் குரு ராகவேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்று பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்.
மாமல்லபுரம் அடுத்த பையனூரில் உள்ள விநாயகா மிஷன் அறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரியில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் அசோகன் தலைமையிலும் முதல்வர் பூங்கொடி முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ஆசிரியர்கள் மாணவர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
பின்னர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த பள்ளியின் தாளாளர் அசோகன், நியூஸ் 7 தமிழின் பாலின சமத்துவ முன்னெடுப்பை தொடர்ந்து, தமது பள்ளி சார்பில் நாட்றம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா