வீலிங் செய்து அதனை இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞரை ஆலேக்காக பிடித்த திருச்சி மாநகர காவல்துறையினர். இனி நான் வீலிங் செய்யவே மாட்டேன் நீங்களும் செய்யாமல் பாதுகாப்பாக இருங்கள் என்று பேசி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் அந்த இளைஞர்.
சினிமாவில் வரும் ஹிரோவை போன்று வேகமாக வீலிங் செய்தபடி திருச்சி காவிரி பாலம் மற்றும் தெப்பக்குளம் சாலை உள்ளிட்ட இடங்களில் வலம் வந்ததோடு மட்டுமல்லாது அதனை விதவிதமான பேக்ரவுண்ட் மியூசிக்கை போட்டு இன்ஸ்டாவில் வெளியிட்டதால் கடந்த மூன்று நாட்களாகத் திருச்சி மாநகரில் இந்த வீடியோக்கள் பேசும் பொருளாக இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது என்று கடந்து செல்பவர்கள் இருந்தாலும் இது போன்ற செயல்களை காவல்துறையினர் வேடிக்கை பார்க்க கூடாது என்பதே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுகளின் கோரிக்கையாக இருந்தது. இதனை அடுத்துக் கடந்த மூன்று நாட்களாக ரேசிங் செய்யும் பைக்கில் பயணிப்பவர்களைத் திருச்சி மாநகர் முழுவதும் கண்காணித்து வந்தது காவல்துறை.
அதே நேரம் இன்ஸ்டவில் வீடியோவை பதிவிட்ட இளைஞரைக் கைது செய்த காவல்துறையினர்அவரின் வாயிலாகவே வீலிங் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இதனால் உயிரிழப்பு ஏற்பட்டால் அது எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்தும் அவரை வைத்தே விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டது தற்போது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுக்குரியதாக உள்ளது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை தாண்டி இவ்வளவு விலை உயர்ந்த பைக்கை , உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருளை நமது பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டுமா என்பது குறித்துப் பெற்றோர்களும் கூடுதல் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதை அனைவரின் கருத்து.