சென்னை மற்றும் சேலத்தில் நியூஸ் 7 தமிழின் மாபெரும் கல்வி கண்காட்சி – நாளை தொடங்குகிறது!

சென்னை மற்றும் சேலத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில், நாளை மற்றும் நாளை மறுநாள் கல்வி கண்காட்சி நடைபெறுகிறது. பிளஸ் 2 முடித்த…

சென்னை மற்றும் சேலத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில், நாளை மற்றும் நாளை மறுநாள் கல்வி கண்காட்சி நடைபெறுகிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கடந்த ஆண்டு கோவையில் நியூஸ் 7 தமிழ் சார்பில் கல்வி கண்காட்சி நடைபெற்றது. அக்கண்காட்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த ஆண்டும் கல்வி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, பிப்ரவரி மாதத்தில் மதுரையில் கல்வி கண்காட்சி நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் இந்த மாதம் 8, 9ம் தேதிகளில் வெகுவிமரிசையாக கல்வி கண்காட்சி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கல்வி கண்காட்சிக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

Image

இதன் தொடர்ச்சியாக நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்கள் சென்னை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில், மாணவர்களுக்கு ஸ்பாட் அட்மிஷன் மற்றும் கல்வி உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி ஆலோசகர்கள் பங்கேற்று மாணவர்களின் சந்தேகங்களுக்கும் பதிலளிக்க உள்ளனர்.

Preview

சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பகுதியில் புதிய பேருந்துநிலையம் அருகே மூவேந்தர் அரங்கில் நடைபெற உள்ளது. இதேபோல் சென்னையில் காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் திறந்து வைக்கிறார். அதே போல் சேலத்தில் நடைபெறும் கல்வி கண்காட்சியை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.