நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்திலிருந்து 2ஆம் கட்டமாக 9 தமிழர்கள் மீட்பு

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, குவைத்திலிருந்து 2ஆம் கட்டமாக 9 தமிழர்கள் தாயகம் திரும்பினர். குவைத்தில் பல்வேறு பணிகளுக்காக தமிழகத்திலிருந்து சென்ற 33 தமிழர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக கொத்தடிமைகளாக வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு…

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, குவைத்திலிருந்து 2ஆம் கட்டமாக 9 தமிழர்கள் தாயகம் திரும்பினர்.

குவைத்தில் பல்வேறு பணிகளுக்காக தமிழகத்திலிருந்து சென்ற 33 தமிழர்கள் ஒரு
மாதத்திற்கும் மேலாக கொத்தடிமைகளாக வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி குவைத்திற்கு சென்றவர்களுக்கு வேலை, ஊதியம் வழங்கவில்லை எனவும், பாதிக்கப்பட்டவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குவைத்தில் சிக்கி தவிக்கும் 33 தமிழர்களை மீட்க வேண்டும் என குடும்பத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில், 33 தமிழர்களும் மீட்கப்பட வேண்டும் என நியூஸ் 7 தமிழ் தொடர் செய்திகளை வெளியிட்டு வந்தது.

இதன் எதிரொலியாக குவைத்திலிருந்து முதல் கட்டமாக 19 தமிழர்கள் கடந்த 20 ஆம் தேதி தாயகம் திரும்பினர். இதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்டமாக 9 தமிழர்கள் குவைத்திலிருந்து இன்று கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். 2 கட்டங்களாக 28 தமிழர்கள் தாயகம் திரும்பிய நிலையில், எஞ்சியுள்ள 5 தமிழர்களும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்ப உள்ளனர். நியூஸ் 7 தமிழ், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் இந்திய தூதரகத்தின் முயற்சியால் குவைத்தில் சிக்கியிருந்த தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்தில் சிக்கிய தமிழர்கள் மீட்பு

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.