நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்தில் சிக்கிய தமிழர்கள் மீட்பு

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கித் தவித்த 35 தமிழர்களுள் 9 பேர் நாளை விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த…

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கித் தவித்த 35 தமிழர்களுள் 9 பேர் நாளை விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர்.

மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 35 தமிழர்கள், கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சியிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி குவைத்துக்கு வேலைக்கு சென்றனர்.

அங்குள்ள நிறுவனத்தில் அவர்கள் கட்டடப் பணிகளை ஒரு வாரம் மேற்கொண்ட நிலையில், இனி வேலை இல்லை என்று நிறுவனம் கூறியுள்ளதால், கொத்தடிமைகளாக, உணவு இல்லாமல் சிக்கித் தவித்தனர். இந்த செய்தியை வீடியோ மூலம் குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தியதை அடுத்து, அவர்களை மீட்கும்படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

இது குறித்து நியூஸ் 7 தமிழ் பிரத்யேக செய்தியாக வெளியிட்டது. இதைக் கண்ட, குவைத்தில் உள்ள வெளிநாடு வாழ் தமிழர் நலச் சங்கத்தினர், பாதிக்கப்பட்டுள்ள 35 தமிழர்களையும் நேரில் சந்தித்து, அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கினர்.

இந்நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கி தவித்த தமிழர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குவைத்திலிருந்து முதல் கட்டமாக 9 தமிழர்கள் நாளை விமானம் மூலம் குவைத்திலிருந்து கேரளா கோழிக்கோடு விமான நிலையம் வருகின்றனர். குவைத்திற்கு வேலைக்கு அனுப்பிய மும்பையைச் சேர்ந்த நிறுவனமே தமிழர்களுக்கு விமான டிக்கெட் வழங்கியுள்ளது. மேலும் மீதமுள்ள 26 தமிழர்களும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என தகவல் வெளியுள்ளது.

நியூஸ் 7 தமிழ், குவைத்தில் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் இந்திய தூதரகத்தின் முயற்சியால் 9 தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்புகின்றனர்.

 

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி: குவைத்தில் சிக்கித் தவித்த தமிழர்களுக்கு உதவி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.