முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தந்தை; ஆசீர்வாதம் பெற்ற புதுமணத் தம்பதி

திருமணம் முடிந்தவுடன், தன் மனைவியுடன் சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்ற புதுமணத் தம்பதியின் வீடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த செல்வமணி என்பவரின் மகன் மணிகண்டனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. ஆனால், மணிகண்டன் தந்தைக்கு நேற்றைய முன் தினம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது என்ன செய்வது என்று புரியாமல் தவித்த மணிகண்டன், நண்பர்களின் ஆதரவுடன், மிகுந்த மன கவலையை சுமந்துகொண்டு திருமணத்திற்கு தயாரானார். இருந்தாலும், தன் தந்தை இல்லாமல் திருமணம் நடைபெறப் போகிறது என எண்ணி மணிகண்டன் மிகுந்த வேதனையடைந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘நூல் விலை உயர்வு; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்’

இந்நிலையில், நேற்று நாச்சியார்கோவில் மணிகண்டனுக்கும், சுஜாலினிக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, உடனடியாக தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தனது தந்தை செல்வமணி இடம் ஆசிர்வாதம் பெற்றார். இந்த நிகழ்ச்சி மருத்துவமனையில் இருந்த பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. அப்போது எடுத்த இந்த வீடியோவை நன்பர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட, தற்போது அந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சர்வதேச விமான சேவைக்கான தடை ஜன.31 வரை நீட்டிப்பு

EZHILARASAN D

‘சிவனுக்கு ஒப்பான தெய்வம் தேடினும் இல்லை’

Jayakarthi

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு

G SaravanaKumar