நூல் விலை உயர்வு; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

பருத்தி, நூல் விலை உயர்வினால், ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் பல இடங்களில் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அதிலும்,…

பருத்தி, நூல் விலை உயர்வினால், ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அதிலும், குறிப்பாக, திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக விளங்கும் நூலின் விலை, கிலோவுக்கு 40 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளதாக பின்னலாடை நிறுவனங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பருத்தி மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆலைகளில் உள்ள பருத்தி மற்றும் நூல்களின் இருப்பு தகவல்களை மத்திய அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும் அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை; 5 மாதங்களில் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு’

மேலும், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மத்திய அரசு விலக்கு அளித்துள்ள பருத்தி மீதான இறக்குமதி வரி குறித்த பொருத்தமான விளக்கங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், பின்னலாடை நிறுவனங்களுக்கான ரொக்க கடன் வரம்பை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என கூறியுள்ளார். தொடர்ந்து நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.