500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் இணைந்து படிப்புகளை வழங்கிட முன்வருமாறு 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு விடுத்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையின் முக்கிய அம்சமாக கூட்டு, இரட்டை படிப்புகளை இந்திய –…

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் இணைந்து படிப்புகளை வழங்கிட முன்வருமாறு 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு விடுத்துள்ளது.

தேசிய கல்விக்கொள்கையின் முக்கிய அம்சமாக கூட்டு, இரட்டை படிப்புகளை இந்திய – அந்நிய உயர்கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் வழங்கலாம் என்று UGC அண்மையில் அறிவித்து. அதனைத் தொடர்ந்து, அதற்கான வழிகாட்டுதல்களையும் அண்மையில் வெளியிட்டது UGC. அதன்படி, வரும் கல்வியாண்டில் (2022-2023) இந்தியாவில் உள்ள IITs, IIMs, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் இணைந்து கூட்டுப்படிப்புகள், இரட்டை படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் போன்றவற்றை வழங்க முன்வருமாறு, UGC அழைப்பு விடுத்துள்ளது. சீனாவை தவிர்த்து இதர நாடுகளில் உள்ள அனைத்து முக்கிய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் UGC அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்தி: ‘உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்ற புதுமணத் தம்பதி’

இந்தியாவில் கூட்டு முயற்சியில் படிப்புகளை நடத்த தகுதியான உயர்கல்வி நிறுவனங்கள் எவை? என்ற பட்டியலையும் பிற நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிடம் வழங்கியுள்ளதாக UGC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவில் உள்ள IITs, IIMs போன்ற முக்கிய உயர்கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்கள் கிளைகளை அமைக்கவும் UGC உதவி செய்து வருவதாகவும், இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சேர 50,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் UGC அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.