புதிதாக உருவானது INDIA கூட்டணியின் மாணவர் அமைப்பு – டெல்லியில் பேரணி நடத்த திட்டம்.!

இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்புகள் அமைப்புகள் ஒன்றினைந்து புதிய அமைப்பை உருவாக்கியுள்ளன அதற்கு United Students Of India எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’…

இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்புகள் அமைப்புகள் ஒன்றினைந்து புதிய அமைப்பை உருவாக்கியுள்ளன அதற்கு United Students Of India எனப் பெயரிடப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.

தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மத்தியப் பிரதேச தலைநகா் போபாலில் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்களான மம்தா பானர்ஜி,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் நிலவியதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் டிசம்பர் 19-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.  இந்த நிலையில் திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்தித்தார். இதில் பேசிய அவர் தெரிவித்ததாவது..

” இந்தியா கூட்டணி கட்சிகளின் மாணவர்களின் அணிகள் ஒன்றிணைந்து United Students of India என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம். இந்த கூட்டமைப்பு சார்பாக ஜனவரி 12 ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்ள இருக்கிறோம். ” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.