தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், என்.வி.என். கனிமொழி சோமு, மு.தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப். 2 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. இந்த நிலையில், அந்த இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் திமுகவின் திருச்சி சிவா, ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், அதிமுகவின் தம்பிதுரை மற்றும் பாமகவின் அன்புமணி ஆகிய 6 பேரும் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மாநிலங்களவையில் இன்று காலை நடைபெற்ற பதவியேற்வு நிகழ்வில் கலந்துகொண்ட 6 பேருக்கும் மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்களில் ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.







